உள்ளடக்கத்துக்குச் செல்

கோதர்தாஸ் காளிதாஸ் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோதர்தாஸ் காளிதாஸ் ஷா

கோதர்தாஸ் காளிதாஸ் ஷா (ஆங்கிலம்:Kodardas Kalidas Shah) கே. கே. ஷா எனஅறியப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதி , விடுதலைப்போராட்டவீரர் , வழக்கறிஞர் , மும்பை சட்டப் பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழக ஆளுநராகவும் இருந்தவர்[1].[2][3] இவர் கலைஞர் மு.கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

வாழ்க்கை சுருக்கம்

[தொகு]

மராட்டிய மாநிலம் கொலாபா மாவட்டம் காரிகான் என்ற இடத்தில் 15.10.1908ல் பிறந்தார். புனே மற்றும் குசராத் கல்லூரியில் சட்டம் பயின்றார். மும்பை உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். புகழ்வாய்ந்த வழக்குகளான செம்பூர் கொலை வழக்கு, நஜினா மஸ்ஜித் கலக வழக்கு அகியவற்றை எடுத்து நடத்தினார்.

அரசியல் பங்களிப்பு

[தொகு]

தேசிய விடுதலை இயக்கத்தில் பங்குகொண்டு 1932 மற்றும் 1942 ல் சிறை சென்றார். பம்பாய் மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் மற்றும் தலைவராகவும், 1962-63 ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராகவும் இருந்தார்.

1952ல் மும்பை சட்டப் பேரவை உறுப்பினராகவும் 1960 மற்றும் 1966 ல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-05. பார்க்கப்பட்ட நாள் 2012-04-04.
  2. Indian states since 1947, (Worldstatesmen, September 16, 2008)
  3. Governors of Tamil Nadu since 1946, (Tamil Nadu Legislative Assembly, September 15, 2008)

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதர்தாஸ்_காளிதாஸ்_ஷா&oldid=3967983" இலிருந்து மீள்விக்கப்பட்டது